LiVe CriCket MaTch

Thursday, February 7, 2013

20 ஓவர் கிரிக்கெட் தரவரிசை: இந்தியாவுக்கு தொடர்ந்து 3-வது இடம்

20 ஓவர் கிரிக்கெட் தர வரிசையில் இந்திய அணி 119 புள்ளிகளுடன் தொடர்ந்து 3-வது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. இலங்கை அணி 131 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், வெஸ்ட் இண்டீஸ் 122 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளன. பேட்ஸ்மேன்கள் தர வரிசையில் இந்திய வீரர்கள் கோலி 6-வது இடத்திலும், ரெய்னா 9-வது இடத்திலும், யுவராஜ் சிங், காம்பீர் 13 மற்றும் 17-வது இடத்திலும் உள்ளனர். நியூசிலாந்தின் பிரென்டன் மெக்கல்லம், வெஸ்ட்இண்டீசின் கெய்ல், இலங்கையின் ஜெயவர்த்தனே ஆகியோர் முறையே முதல் 3 இடங்களைப் பிடித்துள்ளனர். பவுலர்கள் தரவரிசையில் அஸ்வின் 16-வது இடத்தில் உள்ளார். பாகிஸ்தானின் அஜ்மல் முதல் இடத்திலும், இலங்கையின் அஜந்தா மெண்டிஸ் 2-வது இடத்திலும், இங்கிலாந்தின் கிரீம் ஸ்வான் 3-வது இடத்திலும் உள்ளனர்.

No comments:

Post a Comment